உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


 

சவூதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து இந்தோனேசியாவின் சுரபயா நோக்கி பயணித்த இந்தோனேசியா விமானமொன்று இலங்கையில் அவசரமாக தரையிறங்கி இரு பயணிகளை விமான நிலையத்தில் கையளித்துள்ளது.
இன்று (13) அதிகாலை 2.45 மணியளவில் 285 பயணிகளுடன் பயணித்த இந்தோனேசியாவின் A330 வகை லயன் எயார் விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறங்கியுள்ளது.

அதில் பயணித்த இரண்டு பயணிகள் திடீரென சுகவீனமுற்றதை அடுத்து விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து, குறித்த பயணிகள் இருவரும் அவசரமாக விமான நிலைய வைத்தியர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோதிலும், அவர்கள் ஏற்கனவே மரணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த விமானத்தில் வந்த 71 வயதான பெண்ணொருவரும், 64 வயதான ஆண் ஒருவரும் திடீரென சுகவீனமுற்றதை அடுத்து, விமானம் இவ்வாறு அவசரமாக தரையிறங்கியுள்ளது.

மரணமடைந்த குறித்த பயணிகள் இருவரும் இந்தோனேசிய நாட்டவர்கள் ஆவர்.
உரிய மருத்துவ மற்றும் ஏனைய விசாரணைகளின் பின்னர், சடலங்கள் இலங்கையிலுள்ள இந்தோனேசிய தூதரகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்