உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


ஈராக்கில் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலாட் விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்க படை தளத்தின் மீது நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தம் 8 ‘கட்யுஷா’ ரக ஏவுகணைகள் வீசப்பட்டன.

இந்த விமானப்படை தளத்தில் முன்பு அமெரிக்க படையினர் முகாமிட்டு இருந்ததாகவும், ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த தளத்தை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாகவும் ஈராக் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

சில ஏவுகணைகள் பலாட் விமானப்படை தளத்தின் ஓடுபாதையில் விழுந்து வெடித்ததாகவும், ஒரு ஏவுகணை நுழைவுவாயில் பகுதியை தாக்கியதாகவும் சலாஹுதின் மாகாண போலீஸ் அதிகாரி முகமது காலில் தெரிவித்தார். ஏவுகணை விழுந்து வெடித்ததில் நுழைவு வாயில் பகுதியில் இருந்த ஈராக் ராணுவ வீரர்கள் 4 பேர் காயம் அடைந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்