உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மைத் துணை உதவிச் செயலாளர் ஆலிஸ் ஜி.வெல்ஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்துள்ளார்.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை கொழும்பில் வைத்து இன்று (14) சந்தித்து கலந்துரையாடினார்.

ஆலிஸ் ஜி.வெல்ஸ், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, இன்று (14) அதிகாலை நாட்டை வந்தடைந்தார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர், அமெரிக்க முக்கியஸ்தர் ஒருவர் இலங்கை வரும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.ஆலிஸ், நாளை (15) வரை இலங்கையில் தங்கியிருப்பார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்