உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பரந்தன் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக டிப்பர் வாகனமும் தனியார் பேருந்தும் பயணித்துக்கொண்டிருந்தவேளை, முரசுமோட்டைப் பகுதியை கடக்கும்போது தனியார் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில், பின்தொடர்ந்து வந்த டிப்பர் வாகனம் தனியார் பேருந்தின் பின் பகுதியில் மோதுண்டதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதுஇந்த விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி, உதவியாளர் மற்றும் பேருந்தில் பயணித்த 9 பயணிகள் உட்பட 11 பேர் காயங்களுக்குள்ளான நிலையில்,

வட்டக்கச்சி வைத்தியசாலையில் இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒன்பது பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்