உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


துருக்கியின் எலாசிக் மாகாணத்தின் சிவ்ரிஸ் நகரத்தில் 6.8 ரிச்டர் அளவுகோலில் பதிவாகிய நிலநடுக்கத்தில் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சுமார் 20 மணித்தியாளங்களின் பின்னர் மூன்று வயது குழந்தையொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
தலைநகர் அங்காராவிற்கு கிழக்கே உள்ள எலாசிக் மாகாணத்தை கடந்த வெள்ளிக்கிழமை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கட்டடங்கள் பல இடிந்து வீழ்ந்ததாகவும் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் இடம்பெற்று சுமார் 20 மணித்தியாளங்களின் பின்னர் எலாசிக் நகரில் உள்ள கட்டிட இடிபாடுகளில் இருந்து 3 வயது பெண் குழந்தையொன்றை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட அக்குழந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்