உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வேர்க்கடலை (கச்சான்) குழம்பு

தேவையானவையன பொருட்கள்

வேர்க்கடலை – அரை கப் (ஊற வைத்து, வேக வைக்கவும்),

தேங்காய் துண்டுகள் – 2 (அரைக்கவும்),

கடுகு, ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு,ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் –  ஒரு டீஸ்பூன்,

புளிக் கரைசல்,

நறுக்கிய வெங்காயம்  ஒரு டேபிள்ஸ்பூன்,

மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிதளவு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். வேக வைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். சட்டியில்  எண்ணெய் விட்டு சூடானதும்  கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்