தமிழில் எழுத
பிரிவுகள்


சீனாவில் நேற்று மட்டும் 242 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தினால்  உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸிற்கு கொவிட்-19 வைரஸ் என்று பெயரிடப்பட்டது. இந்நிலையில் இவ் வைரஸ் பாதிப்பினால் நேற்று மட்டும் 242 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1357 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுஹான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொவிட்-19 வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.

சீனா, மலேசியா, தைவான், ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் கொவிட்-19 வைரஸ் தாக்கம் அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி, கொவிட்-19 வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் 1,113 பேரும், ஹாங்காங் மற்றும் பில்ப்பைன்சில் தலா ஒருவரும் என மொத்தம் ஆயிரத்து 115 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி வைரஸ் பாதிப்பிற்கு ஹூபேய் மாகாணத்தில் ஒரே நாளில் 242 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சீன அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் கொவிட்-19 வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 357 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் வைரஸ் பாதிப்பிற்கு 242 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து சீனா முழுவதும் அச்ச நிலை ஏற்பட்டிருக்கிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்