தமிழில் எழுத
பிரிவுகள்


வவுனியா வடக்கு – நெடுங்கேணி பகுதிக்குட்பட்ட காட்டுப் பகுதியில், கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட தோட்டமொன்று, விசேட அதிரடி படையினரால், நேற்று (12) முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது, அங்கு பயிரிடப்பட்டிருந்த 1,000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை, விசேட அதிரடிபடையினர் கைப்பற்றியுள்ளனர்.இவ்வாறு முற்றுகையிடப்பட்ட கஞ்சா தோட்டம், சுமார் அரை ஏக்கர் அளவுடையதெனத் தெரிவித்த விசேட அதிரடி படையினர், இவை குறுகிய நாளில் பயிரிடப்பட்டதெனவும் கூறினர்.

கைப்பற்றபட்ட கஞ்சா செடிகள் போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவிலலை​ என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்