தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் தனது பதவியை துறப்பதாக அறிவித்துள்ளார்.பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.
ஓவ்வு பெறும் வரையிலும், தான் விரும்பிய மாவட்டத்திலேயே பணி செய்யவிருப்பதாகவும், எனினும், இடமாற்றம் செய்தால் பதவியிலிருந்து விலகுவேன் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது பதவியை துறப்பதாக அவர் அறிவித்திருப்பது அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.இதுவேளை யாழ்.மாவட்ட புதிய அரசாங்க அதிபராக நிதிபொருளாதார கொள்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றியிருந்த கணபதிப்பிள்ளை மகேசன் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்று மதியம் 2 மணிக்கு நாகலிங்கன் வேதநாயகத்திற்கு பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்