உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மொரட்டுவையிலிருந்து மருதானை நோக்கி கடலோரப் பாதையில் பயணித்த புகையிரதம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 7.50 மணிக்கு மொரட்டுவையிலிருந்து புறப்பட்ட இல.325 என்ற புகையிரதத்தின் இயந்திரத்திலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, தீயணைப்பு துறையினரின் உதவியோடு கொள்ளுபிடிய புகையிரத நிலையத்தில் வைத்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் காரணமாக கடலோரப் பாதையின் புகையிரத சேவைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்