உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் மரணம் அடைந்தனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.
தீ விபத்தில் இருந்து உயிர் பிழைக்க ஜன்னலில் இருந்து குதித்த 4 பேர் இறந்தார்கள். தீயை அணைக்க அதிகாலை 3 மணி அளவில் நூற்றுக்கணக்கான தீயணைப்புத்துறை அதிகாரிகள் போராடினார்கள். 

தீயை அணைக்க 2 மணிநேரம் போராட வேண்டி இருந்தது. தீ விபத்தில் 42 பேர் காயம் அடைந்தனர். இதில் 6 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து பாரிஸ் மேயர் டெர்ட்ரண்ட் டெலனோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: விபத்து ஏற்பட்ட குடியிருப்பில் பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை. தீ பரவியதற்கான மூல காரணம் கண்டறிய நீதி விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வடக்கு பாரிசில் தீ விபத்துக்கள் பொதுவானதாக உள்ளன. அங்கு 100 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் அதிகம் உள்ளன. அந்தக் கட்டிடங்களின் பராமரிப்புப் பணியும் மோசமாகவே உள்ளது. மேலும் பழமையான கட்டிடங்களில் பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.

இதனால் வடக்குப் பாரிசில் தீ விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. தற்போது தீ விபத்து ஏற்பட்ட பகுதியிலேயே கடந்த மாதம் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது 8 பேர் காயம் அடைந்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்