உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ்– அரியாலைப் பகுதியில் கொள்ளையிடப்பட்ட 20 பவுன் நகை மற்றும் பணத்துடன் ஐந்து பேர் யாழ்.பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அரியாலையில் உள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.இதன்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 450,000 பெறுமதியான களவாடப்பட்ட பணம் மற்றும் 20 பவுண் களவாடப்பட்ட நகைகள் மீட்கப் பட்டதோடு குறித்த வீட்டில் தங்கியிருந்த சந்தேகத்துக்கிடமான அரியாலை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் யாழ். குடாநாட்டில் பல்வேறுபட்ட இடங்களில் வழிப்பறி மற்றும் நகைத் திருட்டுக்கள் இடம்பெற்றுவரும் நிலையில் யாழ். பொலிஸாரால் குறித்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் 5 பேரும் 20 தொடக்கம் 25 வயது உடையவர்கள் எனவும் சந்தேக நபர்களை இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்