உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்லிபியாவில் அரசு ஆதரவு படைகள் மிஸ்ரதா நகரின் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலில் 23 பேர் பலியாயினர்.
லிபியாவில் அதன் தலைவர் கடாபியை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க கடாபி ராணுவம் விமானத் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். 

இதையடுத்து லிபியா மீது பொருளாதார தடை மற்றும் ஆயுத தடை விதிக்கப்பட்டுள்ளது. கடாபி பதவி விலக மறுப்பதால் அவரது சொத்துக்களை ஐரோப்பிய நாடுகள் முடக்கியுள்ளன.

போராட்டக்காரர்கள் மீது கடாபி ராணுவம் தாக்குதல் நடத்துவதை கண்டித்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய படைகள் அந்நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் லிபியாவின் மேற்கு பகுதியில் உள்ள மிஸ்ரதா நகரில் கடாபி ராணுவத்தினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 23 பேர் பலியானதாகவும், நேட்டோ படைகள் தங்கள் நடவடிக்கையை தீவிரப்படுத்தாவிட்டால் கடாபி படைகளின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்