உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வவுனியா சின்னசிப்பிக்குளம் பகுதியில் நேற்றிரவு இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா செட்டிகுளம் சின்னச்சிப்பிகுளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் ஹயசிங்கபுர இராணுவ முகாம் நோக்கி‌ சென்றுகொண்டிருந்த ஹன்டர் வாகனத்தின் பின்பாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சின்னசிப்பிகுளத்தை சேர்ந்த நௌபர் மிர்ஷட் (24வயது), அப்துல் ஜக்பர் ஜூவான் (22 வயது) ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட இருவரில் ஒருவரான நௌபர் மிர்ஷட்‌ என்ற இளைஞன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்