உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஒலியை முதன் முதலில் பதிவு செய்யும் கருவியை பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் கண்டுபிடித்து மார்ச் 25, 1857 இல் காப்புரிமம் பெற்றார். இது ஒலியை ஒரு பார்க்கக்கூடிய ஊடகமாகப் பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பதிவு செய்த ஒலியை மீண்டும் ஒலிக்கச் செய்ய முடியாமல் இருந்தது.

பிரெஞ்சு அறிவியலாளர் சார்ல்ஸ் குரொஸ் என்பவர் ஏப்ரல் 18, 1877 இல் போனோகிராஃப் பற்றிய தனது விளக்கங்களைத் தந்தார். இதனைப் பின்னர் 1877 களின் இறுதியில் பொது மக்களின் பார்வைக்குத் தந்தார். ஆனாலும் அதற்கு அவரால் செயல்முறை விளக்கம் தரமுடியவில்லை.

அதேநேரம் தாமஸ் எடிசன் தனியாக ஆய்வு செய்து இதற்கு வேலை செய்யக்கூடிய கருவியைக் கண்டுபிடித்தார். நவம்பர் 21, 1877 இல் தாமஸ் ஆல்வா எடிசன் ஒலியை பதிவு செய்து அதனை மீளவும் ஒலிக்கச் செய்யும் தனது போனோகிராஃப் என்ற கருவி பற்றிய கண்டுபிடிப்பை அறிவித்தார். அதனை முதற் தடவையாக நவம்பர் 29 இல் காட்சிப்படுத்தினார்.இதன்பின்னர் 1878ம் ஆண்டும் பிப்ரவரி மாதம் இதே நாளில் அவரால் காப்புரிமம் பெறப்பட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்