உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


நல்லூர் பிரதேச செயலக பகுதியில் உள்ள கிராம சேவையாளர்களிடம், தொலைபேசி மூலம் 40 ஆயிரம் ரூபா பண மோசடி செய்யப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் பலரை நேற்று தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டவர்கள், தாம் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் என அறிமுகப்படுத்தியுள்ளனர்.

“உங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் உங்கள் கிராமத்திற்கு வரவுள்ளோம். அதற்கான செலவீன பணத்தினை ‘ஈசி காஷ்’ (eZcash) மூலம் அனுப்பி வையுங்கள்” எனக் கோரியுள்ளனர்.

இதையடுத்து ஒரு கிராம சேவையாளர் 14 ஆயிரம் ரூபாவையும் இன்னொரு சேவையாளர் 25 ஆயிரம் ரூபாவையும் ‘ஈசி காஷ்’ மூலம் அனுப்பியுள்ளனர். ஏனைய கிராம சேவையாளர்கள் சுதாகரித்துக் கொண்டு ஏமாறாமல் தப்பிக்கொண்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக ஏமாற்றப்பட்ட கிராம சேவையாளர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யவுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்