உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வவுனியா பன்றிக்கெய்தகுளம் ஏற்பட்ட விபத்தில் காரைநகரைச் சேர்ந்த பிரபல வர்த்தகரின் குடும்பம் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் பஜிரோவும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலியாகியதுடன் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் தற்பொழுது வெளியான தகவல்களின்படி, கொழும்பு வெள்ளைவத்தையிலிருந்து காரைநகருக்குத் வந்திருந்த பிரபல வர்த்தகரின் குடும்பத்தினர் மீண்டும் கொழும்பு திரும்பிய வேளையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பிலுருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சிறிய ரக வாகனமும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

இதன்போது, சிறிய ரக வாகனத்தில் பயணித்த பிரபல வர்த்தகரான வார்கரை சோமர், அவரது மகள் மருமகன் பிள்ளை என அனைவரும் பலியாகியுள்ளனர்.ஆறுமுகம் தேவராஜா (62), தேவராஜா சுகந்தினி (51), தேவராஜா சுதர்சன் (30), இராமலிங்கம் சோமசுந்தரம் (83) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலியாகினர்.

வாகன சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (24) என்ற இளைஞனும் பலியாகியுள்ளார்.இதேவேளை வானில் பயணித்த சோமசுந்தரம் லக்சனா (29) என்பவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பேருந்துக்கு தீ வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்