உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இஸ்லாமிய பயங்கரவாதம்தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதில் இருந்து நாடுகளை பாதுகாக்க இணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டு நாள் விஜயமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகை தந்துள்ள ட்ரம்ப் அகமதாபாத் கிரிகெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், இந்தியாவிற்கு எப்போதும் உண்மையான நட்பு நாடாக அமெரிக்க விளங்கும் என உறுதியளித்தார்.

இந்தியாவை அமெரிக்க நேசிக்கிறது எனவும், இந்தியா மீது அமெரிக்க மதிப்புகொள்வதாகவும் தெரிவித்த ட்ரம்ப் இந்தியாவின் சிறந்த தலைவராக மோடி விளங்குவதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் தலைமையில் ஒவ்வொரு கிராமமும் மின்சார வசதியை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் மோடியின் தலைமையில் இந்தியா எந்த சாதனையையும் நிகழ்த்தும் எனக் கூறினார்.

70 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வல்லரசு நாடாக மாறியுள்ளதாக தெரிவித்த அவர், உலக முழுவதும் வாழும் நடுத்தர மக்களின் தாயகமாக இந்தியா உருவெடுக்கும் எனவும் தெரிவித்தார்.

எல்லைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அனைத்து நாடுகளுக்கும் உரிமை உள்ளதாகவும், பயங்கரவாத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயற்படும் எனவும் ட்ரம்ப் உறுதியளித்தார்.அத்துடன் இந்தியாவிற்கான இராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்குவோம்.

இந்த பிராந்தியத்தில் தொடர்ந்து நல்லுறவு நீடிக்க அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இதன் முதற்கட்டமாக இந்தியாவுடன் 3 பில்லியன் டொலர் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் நாளை கையெழுத்திடவுள்ளதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.

மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 100 வீதம் அழிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் அல்பக்தாதி கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த ட்ரம்ப் தெற்காசியாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமெரிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்