உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


புறக்கோட்டை மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் இருந்து தொல்பொருள் மதிப்புள்ள இரண்டு தங்க சிலைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

18 அங்குலம் உயரமும் 11 கிலோ 805 கிராம் எடையும் கொண்ட சிலை ஒன்றும் மற்றும் 02 அங்குலம் உயரமும் 152 கிராம் எடையும் கொண்ட சிலை ஒன்றும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

40 வயதுடைய சந்தேகநபர் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், கொழும்பு குற்றவியல் பிரிவு இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்