உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இங்கிலாந்துக்கு சொந்தமான பிரமாண்டமான டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய சம்பவத்தின் 99ம் ஆண்டு நினைவு தினம் அமெரிக்க கடற்படை சார்பில் அனுசரிக்கப்பட்டது.
டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சர்வதேச கடல் ரோந்துப் படையினர் தெற்கு அட்லான்டிக் கடலின் நியூபவுண்ட்லாந்து பகுதியில் மலர் வளையங்களை நீரில் இறக்கினர்.

டைட்டானிக் மூழ்கிய சம்பவத்தையடுத்து கடலில் உள்ள பனிப்பாறைகளை கண்காணிக்கும் வகையில் சர்வதேச கடற்பகுதியில் லண்டனை சேர்ந்த படைப்பிரிவினர் ரோந்து நடவடிக்கைகளை இப்போதும் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 1912ம் வருடம் ஏப்ரல் 15ம் திகதி லண்டனிலிருந்து புறப்பட்ட டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது. இதில் அந்தக் கப்பலில் பயணம் செய்த 1522 பேர் இறந்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்