உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


இன்றுகாலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் யாழில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வர்த்தக நிலையங்களை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக தொடர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலைமை இருந்தது.இந்த நிலையில் இந்த ஊரடங்கு இன்று தளர்த்தப்பட்டள்ள நிலையில் யாழிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பெருமளவும் மக்கள் செல்வதை அவதானிக்க முடிந்தது

கொரோனோ தாக்கத்திலிருந்து விடுபடுதற்காக முகமூடி அணிந்து செல்லுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தபோதும் இன்றையதினம் வர்த்தக நிலையங்களுக்கு சென்ற மக்கள் பலரும் முகமூடி அணிந்து செல்லவில்லை.

அத்தோடு இடைவெளிவிட்டு நிற்குமாறு அறிவுறுத்தப்பட்டும் சில இடங்களில் இடைவெளி விட்டு நின்றிருந்தாலும் பல இடங்களில் மக்கள் கூட்டமாக இருக்கின்றனர்.
இந்நிலையில், முகமூடி அணிந்து வருமாறு பொலிஸார் அறிவுறுத்தியதுடன், நபர்களுக்கிடையில் இடைவெளியை பின்பற்றுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்