உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் நிலைகுலைந்து போயுள்ள நிலையில் அங்குள்ள இடாகோ மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. தலைநகர் போயிசின் வடகிழக்கில் உள்ள மலைப்பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மாகாணம் முழுவதும் அதன் அதிர்வுகள் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

20 முதல் 30 வினாடிகள் வரை நீடித்த இந்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுக்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தெரிகிறது.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்