உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சமூகவலைத்தளம் ஊடாக போலித் தகவல்களை வெளியிட்ட பெண்ணொருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று (5) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாதுவை – ரஜமல் வீதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தனிமைப்படுத்தப்படுவர்கள் உரிய முறையில் இலங்கையில் தனிமைப்படுத்தப்படுவதில்லை என்றும் இதனால் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனரெனவும் இப் பெண் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்