உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவர், அங்கு உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த 58 வயதுடைய அவர், கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி கம்போடியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.

அவரது உயிரிழப்புக்கு கோரோனா தொற்று காரணமாக இருக்கலாமா? என்று பரிசோதனை செய்வதற்கு இரத்த மாதிரிகள் பெறப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர் ஆஸ்மா நோயாளியான அவருக்கு கடந்த மூன்று நாட்களாககாய்ச்சல், தடிமன் உள்ளிட்டவை காணப்பட்டதால் இன்று அதிகாலை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு மாதிரிகள் பெறப்பட்டு கோரோனா தொற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது” என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்