உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


பிரபல நடிகை மனோரமாவின் மகன் பூபதி. இவர் வழக்கமாக இரவில் சாப்பிடும் மாத்திரைகளில் ஒன்றை கூடுதலாக நேற்று இரவு சாப்பிட்டு உள்ளார். இதனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவரது உடல் நிலை தேறியது.

இதற்கிடையே மனோரமா மகன் மது கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியது. இதனை மாம்பலம் போலீசார் மறுத்தனர். இதுபற்றி இன்ஸ்பெக்டர் பாலமுரளி கூறும் போது, ‘இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்