உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகள், ஊழியர்களுக்காக விசேட காப்புறுதித் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கமைய விரு அபிமன் எனும் பெயரில் 15 இலட்சம் ரூபாய் விசேட காப்புறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.அதாவது, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்கள் கடமையின் போது உயிரிழக்கும்போது, உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு, 15 இலட்சம் ரூபாய் காப்புறுதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கொவிட்-19 சுகாதார சமூக நிதியத்துக்கு 50 இலட்சம் ரூபாய் பணத்தை அன்பளிப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்