உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வல்லைப்பாலத்தில் நேற்றுக் காலை 10 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த எஸ்.அரவிந்தன்(வயது26), அளவெட்டிப்பகுதியைச் சேரந்த எஸ். தமிழ்வாணன் (வயது28) ஆகியோரே படுகாயமடைந்தவராவார்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. யாழ்பாணத்திலிருந்து வடமாராட்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முற்பட்டவேளை வீதியில் சறுக்கி விழுந்து படுகாயமடைந்த நிலை யில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த அரவிந்தனே மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் பின்னால் இருந்து வந்தவரான தமிழ்வாணன் காலில் எதிரே வந்த லொறியின் சில்லு ஏறியதில் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வல்லைப் பாலத்தில் மூன்றாவது நாளாக இடம் பெறும் விபத்து என்பதும் குறிப் பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்