Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சர்வதேச அளவில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பலியானார்.
அமெரிக்கா தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு துணை ராணுவம் (ஐ.எஸ்.ஏ.எப்) ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல் கொய்தாக இயக்கத்துக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளது.

இந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள குனார் மாகாணத்தில் நடந்த விமானத் தாக்குதலில், அபு ஹப்ஸ் அல் நஜ்தி என்ற அப்துல் கனி என்பவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் பல்வேறு அபாயகரமான பயங்கரவாத தாக்குதல்களுக்குத் திட்டமிட்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இவர் தேடப்படும் 85 பயங்கரவாதிகளில் ஒருவராக உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்