தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


ஐரோப்பிய நாடுகளில் கோடை விடுமுறையின் போது பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் இடம் பெறுவது வழக்கம். இது போன்ற சாகச நிகழ்ச்சி ஒன்று இங்கிலாந்தின் கென்ட் நகரில் நடந்தது.
இதில் ராட்சத பீரங்கியில் குண்டுக்கு பதிலாக ஒரு வாலிபரை உட்கார வைத்து சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் பங்கேற்றார். அவர் ஏணியில் ஏறி 7.5 டன் எடையுள்ள பீரங்கியில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் பீரங்கியின் பின்புறம் தீ வைக்கப்பட்டது.

அப்போது பீரங்கி டமார் என்ற சத்தத்துடன் வெடித்தது. இதை தொடர்ந்து குண்டுக்கு பதிலாக பீரங்கியின் வாய் பகுதியில் உட்கார்ந்திருந்த அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் தூக்கி எறியப்பட்டார். இதுபோன்ற சாகச நிகழ்ச்சி நடைபெறும் போது அதில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு வலை கட்டப்பட்டிருக்கும்.

அதுபோன்று இந்த நிகழ்ச்சியிலும் வலை கட்டப்பட்டிருந்தது. ஆனால் பீரங்கியால் சுட்ட போது அந்த வாலிபர் வலையில் விழாமல் கீழே தூக்கி வீசப்பட்டார். இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டொக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் நிகழ்ச்சி பார்க்க வந்திருந்த பொதுமக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

6 Responses to “ராட்சத பீரங்கியில் குண்டுக்கு மாற்றாக பீரங்கியில் வைத்து சுடப்பட்ட வாலிபர் மரணம்!”

 • கலட்டிப்புயல் வடிவேலு:

  இதத்தான் சொல்லூறது.கல்லோட விளையாடு மண்ணோட விளையாடு வெடிகுண்டோடும் விளையாட்ட

 • சச்சி:

  பாலா அண்ணா புத்திசாலிக்கு எதிர்பதமே முட்டாள்தான்.தங்கள் குறுன்க்கருத்து விளங்கவில்லையே!

 • T.BALA. pannipulam:

  ஆளுபவர்கள் புத்திசாலியான முட்டாள்கள்.ஆளப்படுபவர்கள் மனவலிமையுள்ள முட்டாள்கள். த.பாலா

 • சச்சி:

  முட்டாள்களா உலகின் பாதியை (கிட்டத்தட்ட)ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.

 • T.BALA. pannipulam:

  இவர்களை முட்டாள் என்றால் நாங்கள்,நீங்கள் எல்லாம் புத்திசாலிகள் என்று அர்த்தப்படுமா? பணிப்புலம் த.பாலா

 • ஒல்லாந்தன்:

  ஆங்கிலேயர்கள் முட்டாள்கள் என்பதை நிரூபிப்பதில் இதுவும் ஒன்று

Leave a Reply for கலட்டிப்புயல் வடிவேலு

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்