உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


உலகம் முழுவதும் பரவி பெரும் அழிவினை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன உள்ளிட்டவை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா உள்பட 102 நாடுகள் வைத்த கோரிக்கைக்கு உலக சுகாதாரஅமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சீன அரசின் வைரஸ் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன. கொரோனா வைரஸ், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட கிருமி என்று இந்திய அமைச்சர் நிதின் கட் கரியும் உறுதிபட தெரிவித்துள்ளார். ஆனால் அதை சீனா மறுத்து வருகிறது.

இதுதொடர்பாக சர்வதேச நிபுணர்கள் குழு சீனாவுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், சர்வதேச நிபுணர் குழுவை அனுமதிக்க மாட்டோம் என்று சீனா வாதிட்டு வருகிறது.

இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பின் தற்போதைய தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார், கொரோனா வைரஸ் குறித்த உண்மைகளை சீனாவோடு சேர்ந்து உலக சுகாதார அமைப்பும் மறைத்துவிட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்