உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மட்டுவில் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். சந்திரபுரம், மட்டுவில் வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த முரளிதரன் (30) என்பவரே வாள் வெட்டிற்கு இலக்கானவர் ஆவார். இவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர், பின்னர் மேலதிக சிகிசைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இம்மோதல் சம்பவத்தின்போது பல்சர் ரக மோட்டார் சைக்கிளொன்றும் தீக்கிரையாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்திருப்பதாக, சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்