தமிழில் எழுத
பிரிவுகள்


சிரியா நாட்டில் அரசு துருப்புகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிரியா மீதான ஐரோப்பிய தடைக்கு ஜேர்மனி தீவிர ஆதரவு தெரிவித்துள்ளது. ஜேர்மனி நிலை குறித்து அரசுச் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் செய்பெர்ட் பெர்லினில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,”சிரியத் துருப்புகள் கடுமையான மனித உரிமை மீறலை மேற்கொண்டுள்ளது. எனவே ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கைக்கு ஜேர்மனி முழு ஆதரவு அளிக்கும்” என்றார்.

இந்த தடை நடவடிக்கையின்படி சிரியா அதிகாரிகள் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடு கொண்டு வரப்படும். அவர்களது சொத்துக்களும் முடக்கப்படும். அதே போன்று ஐரோப்பிய ஒன்றியம் மூலமாக அளிக்கப்படும் பொருளாதார உதவிகளும் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரியாஸ் பெஸ்கே கூறியதாவது: பிரஸ்சல்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஒரு கூட்டத்திற்கு ஜேர்மனி அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தடை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறது.

இந்தக் கூட்டத்தில் சிரியா மீது கடும் தடை நடவடிக்கை எடுப்பதற்கான கருத்துருவை ஜேர்மனி அளிக்கிறது. சிரியாவில் நிலவும் பதட்ட நிலையைக் குறித்து விவாதிக்க ஐ.நா முடிவு எடுத்ததை ஜேர்மனி வரவேற்றுள்ளது.

பாதுகாப்புக் கவுன்சிலில் ஜேர்மனி நிரந்தரமற்ற உறுப்பினராக உள்ளது. சிரியா மனித உரிமைக் கவுன்சிலில் இடம்பெறுவதற்கு ஜேர்மனி எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும் அரசு செய்தித் தொடர்பாளர் செய்பெர்ட் கூறினார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்