உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து இன்று (28) காலை 10.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது.பூநகரியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தல் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி செய்திநகர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் அன்னலட்சுமி (64-வயது) என்ற வயோதிபப் பெண் உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய உயிரிழந்தவரின் மகள் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த டிப்பர் வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதியைக் கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்