உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் ‘ரொமாண்டிக் காமெடி’ திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தில், நான்கு நடிகைகளுடன் ஜித்தின் ராஜ் – லதா ஹெக்டே ஜோடியும், ஒய் ஜி மகேந்திரன், சுலக்ஷனா, மனோபாலா, பானுசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சுந்தர்.சி சிறப்பு வேடத்தில் வந்து மெருகேற்றுகிறார். இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்.

“இது, காதலும் நகைச் சுவையும் கலந்த படம். 1980-களில் கதாநாயகிகளாக இருந்த ராதிகா சரத்குமார், சுஹாசினி, குஷ்பு, ஊர்வசி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவர்கள் நடித்த 4 வெவ்வேறு கதாபாத்திரங்களை பின்புலமாகவும், அவர்களின் தற்போதைய வாழ்க்கையை அடித்தளமாகவும் வைத்து முற்றிலும் வித்தியாசமாக, குடும்பப் பாங்காக திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்