உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகளாவிய போர் நடந்து கொண்டிருக்கிறது. 58 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த போரில் முக்கிய பங்கு வகிக்கிற இந்தியா, பிற தெற்காசிய நாடுகளுக்கு மட்டுமல்லாது உலக நாடுகளுக்கு உதவி வருகிறது.

பல நாடுகளுக்கு நன்கொடையாக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளையும், பாரசிட்டமால் மாத்திரைகளையும், உணவுப்பொருட்களையும் இந்தியா வழங்கி இருக்கிறது. தொடர்ந்து பல்வேறு உதவிகளை உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று நோயின் உலகளாவிய நிலை குறித்து காணொலி காட்சி வழியாக ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உரையாடினார்.

இதில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக சமீபத்தில் பதவி ஏற்ற டி.எஸ். திருமூர்த்தியும் கலந்து கொண்டார். அவரிடம் பேசுகையில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் பிற நாடுகளுக்கு இந்தியா செய்து வருகிற உதவிகளை பாராட்டினார்.

இதுபற்றி திருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இந்த கூட்டத்தில் ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் இந்தியாவுக்கு வந்த நினைவுகளை அன்புடன் நினைவுகூர்ந்தார். கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் மற்ற நாடுகளுக்கு இந்தியா செய்து வருகிற உதவிகளை மனதார பாராட்டினார்” என கூறி உள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்