உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


தென்மராட்சி, மந்துவில் வடக்கு முத்துமாரியம்மன் ஆலய பகுதியில் இன்று (30) அதிகாலை ஊரடங்கு அமுலில் இருந்த போது வீடு ஒன்றுக்குள் புகுந்த குழுவினர் தந்தையை கட்டி வைத்துவிட்டு மகளான யுவதியை (20-வயது) கடத்திச் சென்றுள்ளனர்.
வாள், கத்தி மற்றும் கொட்டன் போன்ற ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த 7 முதல் 10 பேர் கொண்ட குழுவே குறித்த யுவதியைக் கடத்திச் சென்றுள்ளது.
இது தொடர்பில் யுவதியின் தந்தை தெரிவிக்கையில், ‘தம்மை பொலிஸ் சிஐடி எனக்கூறியபடி குழு ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. பொலிஸாருக்கு முறையிட முயன்ற போது எனது கைபேசியை தட்டிவிட்டு என்னை தாக்கி கட்டிப்போட்டு மகளை கடத்தி சென்றனர்’. என்றார்.

இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட யுவதியை சில மணி நேரங்களில் யுவதியின் வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் விடுவித்து குறித்த குழு தப்பிச் சென்றுள்ளது.தனையடுத்து யுவதியை மீட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை ஒரு வருடமாக காதலித்த ஒருவரே இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன் ஊரடங்கை மீறி, வீட்டுக்குள் அத்துமீறியமை, யுவதியை கடத்தியமை தொடர்பில் இருவரை கைது செய்தோம் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் மேலதிக சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகள் தொடர்ந்து வருகிறது. யுவதியை நாளை (01) சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜரப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்