உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மலாவியின் எதிர்க்கட்சித் தலைவர் லாசரஸ் சக்வேரா ஜனாதிபதி தேர்தலுக்கான மறு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வாக்கெடுப்பில் அவர் 58.57% வாக்குகளைப் பெற்று தற்போதைய பீட்டர் முத்தாரிகாவை தோற்கடித்தார் என தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.

பெப்ரவரியில், மலாவியின் நீதிமன்றம், 2019 மே மாதம் இடம்பெற்ற தேர்தலில் வாக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முத்தரிக்காவின் வெற்றியை ரத்து செய்தது.

2017 ல் கென்யாவுக்குப் பின்னர், முறைகேடுகள் தொடர்பாக ஜனாதிபதித் தேர்தலை ரத்து செய்த இரண்டாவது ஆபிரிக்க நாடு மலாவியாகும்.

சனிக்கிழமையன்று வெளியான உத்தியோகபூர்வ முடிவைத் தொடர்ந்து, தனது வெற்றி ஜனநாயகம் மற்றும் நீதிக்கான வெற்றி என சக்வேரா கூறினார்.

இந்நிலையில் லாசரஸ் சக்வேரா இன்று ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்