உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் 100 கோடி ரூபா நட்ட ஈடு கோரி, இலங்கையின் தேசிய உளவுத் துறை பிரதானி மேஜர் ஜெனரால் துவான் சுரேஷ் சலே கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த நட்ட ஈட்டை செலுத்தாவிடின் 14 நாட்களில், யஸ்மின் சூக்காவுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக குறிப்பிட்டே, சட்டத்தரணி பஹன் வீரசிங்க ஊடாக அவர் இந்த நட்ட ஈடு கோரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

கடந்த மே (22), தேசிய உளவுத் துறை பிரதானியான சுரேஷ் சலே மற்றும் மேலும் நான்கு இரானுவத்தினர் பிரிகேடியர் தரத்தில் இருந்து மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டனர். அது தொடர்பில் கடந்த ஜூன் (01) விஷேட ஊடக அறிக்கை ஒன்றினை யஸ்மின் சூக்கா வெளியிட்டிருந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாக கூறப்படும் தற்போது தென் அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியர் வரதராஜா துறைராஜன் என்பவரை சித்திரவதை செய்தமை தொடர்பில் சுரேஷ் சலே பொறுப்புக் கூற வேண்டியவர் என தெரிவித்திருந்தார்.

அத்துடன் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையுடன் தொடர்புடைய இராணுவ வீரர் ஒருவரும் மேஜர் ஜெனரால் சுரேஷ் சலேவின் குழுவில் சேவையாற்றியதாகவும் சுட்டிக்காட்டி, சுரேஷ் சலே மேஜர் ஜெனரால் பதவி உயர்த்தப்பட்டமையை யஸ்மின் சூக்கா விமர்சித்திருந்தார்.

இந்நிலையிலேயே யஸ்மின் சூகா கூறும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள சுரேஷ் சலே, தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளதாக கூறியே நட்ட ஈடு கோரி கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

இலங்கையில் இராணுவ சேவையில் இருக்கும் அதிகாரி ஒருவர், சர்வதேச அமைப்பொன்றின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக, நட்ட ஈடு கோரும் சட்ட ரீதியிலான கடிதத்தினை அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்