உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் கிணற்றை ஆழப்படுத்த இறங்கிய ஒருவர் ஒட்சசன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேசன் குடியிருப்பு 01ஆம் வட்டாரத்தில் நேற்று காலை இடம்பெற்றதுடன் 24 வயதான ஆ.றதுர்யன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடும் வறட்சி காரணமாக நேசன் குடியிருப்பு பகுதி மக்களின் கிணறுகள் வற்றி காணப்படுகின்றன. கிணறுகளை மேலும் ஆழப்படுத்தும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இருந்து குடிதண்ணீரினை பெற்றுக்கொள்வதற்காக மேலும் ஆழப்படுத்த முற்பட்ட போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இதன்போது கிணற்றில் இறங்கியவர்கள் மயக்கம் அடைந்த நிலையில் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கிணற்றிற்குள் வேப்பம் இலைகள் கட்டி இறக்கப்பட்டு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். மற்றையவர் உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்