தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


மத்திய மெக்சிகோ நகரான இரபுவாட்டாவில் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.அடையாளம் தெரியாத தாக்குதல்தாரிகளால் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் ஏழு பேர் காயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் மறுவாழ்வு மையத்தின் மீது கடந்த ஒருமாதத்தில் இடம்பெறும் இரண்டாவது தாக்குதலாக இது உள்ளது.போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு குற்ற கும்பல்களிடையே மோதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரால் வெளியிடப்பட்டிருக்கும் சம்பவ இடத்தை காட்டும் புகைப்படம் ஒன்றில், அறை ஒன்றில் இரத்தம் தோய்ந்த 11 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் வன்முறையை குறைப்பதாக வாக்குறுதி அளித்து 19 மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அன்ட்ரெஸ் மனுவேல் லோபெஸ் ஒப்ரடோர் பதவிக்கு வந்த பின் இடம்பெறும் மோசமான சம்பவங்களில் ஒன்றாக இது உள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்