தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


யாழ்.நகருக்கு அருகில் உள்ள இந்துக்கல்லூரி பகுதியல் வாள்வெட்டு வன்முறை கும்பல் பெற்றோல் குண்டு வீசியதுடன் வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று இரவு 8.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டின் மீது இனம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

எனினும் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்களே இந்தத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

இந்த பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் இராணுவத்தினர் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்