தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


அமெரிக்க நகரங்களில் சனி மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 7 மற்றும் 14 வயதுச் சிறுவா்கள் உட்பட 32 போ் கொல்லப்பட்டனா்அமெரிக்காவில் சுதந்திரதினம் கொண்டாடப்பட்ட சனிக்கிழமை மட்டும் நாடு முழுவதும் 100-க்கும் அதிகமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன. இந்த தாக்குதல்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக சிகாகோ மாகாணத்தில் மட்டும் 63 பேர் மீது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் 17 பேர் உயிரிழந்துள்னர்.

மேலும் நியூயோர்க்கில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற 41 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர். 37 பேர் காயமடைந்ததாக நியூயோா்க் பொலிஸாா் கூறினர்.

இந்த வன்முறைகள் ஞாயிற்றுக்கிழமை வரை தொடா்ந்தன. மன்ஹாட்டனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மார்பில் குண்டு பாய்ந்து 14 வயதுச் சிறுமி பரிதாபமாகப் பலியானார்.

மெம்பிஸ், ஒமாஹா மற்றும் கிளீவ்லாண்ட் ஆகிய பகுதிகளிலும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பலா் காயமடைந்தனா்.

வட கரோலினாவில் வார இறுதிக் கொண்டாட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 74 வயது பெண் கொல்லப்பட்டார்.

சுதந்திர தினம் மற்றும் வார இறுதி விடுமுறையின்போது கிளப்புக்கள், சூதாட்ட மையங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களிலேயே பெருமளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்