தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான கைகலப்பு கத்திக் குத்தில் முடிவடைந்ததில் மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.யாழ் – பரமேஸ்வரா சந்திக்கு அண்மையில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் சிலர் நேற்று (17) இரவு கூடியிருந்த போது, அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது மாணவன் ஒருவர் ஆத்திரமடைந்து மற்றொரு மாணவரை கத்தியால் குத்த முற்பட்டுள்ளார். இதனை அவதானித்த சிங்கள மாணவர் ஒருவர் தடுக்க முற்பட்ட போது அவரது கழுத்தில் கத்திக் குத்து ஏற்பட்டுள்ளது.

அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கத்தியால் குத்தினார் என்ற குற்றச்சாட்டில் மாணவர் ஒருவரை கைது செய்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்