தமிழில் எழுத
பிரிவுகள்


அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலுள்ள உட்டா மாகாணத்தில் மேற்கு ஜோர்டான் நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து பி.ஏ.32 ரக சிறிய விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஒரு விமானி, 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் என மொத்தம் 6 பேர் இருந்தனர். விமான நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்கு உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தது.

இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானி, ஒரு பெண் மற்றும் 9 வயது சிறுமி என 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.மேலும் விமானத்தில் இருந்த மற்றொரு பெண் 2 சிறுவர்கள் மற்றும் விமானம் விழுந்த வீட்டினுள் இருந்த ஒரு பெண் என 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்