உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஜா.ரகுபதி  பாலாஜி, நிகிலா, அப்புக்குட்டி நடிப்பில் உருவாகி  இருக்கும் படம் ‘ஒன்பது குழி சம்பத்’. இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ல் ஆன்லைன் தளத்தில் வெளியாக இருக்கிறது. ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம், 80-20 பிக்சர்ஸின் திருநாவுக்கரசு தயாரிப்பில், ஜா.ரகுபதி இயக்கத்தில், பாலாஜி, நிகிலா, அப்புக்குட்டி, இந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படம் கிராமத்தில் போக்கிரியாகத் திரிந்துகொண்டு, கோலி குண்டு விளையாடிக்கொண்டு திரியும் இளைஞனின் கதை. அவனுடைய வாழ்வில் ஒரு பெண் நுழைகிறாள்.

அதனால் அவனுடைய வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன? அப்பெண்ணின் வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன? என்பதை சொல்லும்படம் இது. சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லரோடு இப்படத்தின் கிளைமாக்ஸை முடித்திருக்கிறார் இயக்குநர் ஜா.ரகுபதி.

இசை – சார்லி, ஒளிப்பதிவு – கொளஞ்சி குமார், படத்தொகுப்பு – தீனா ஆகியோர் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்