உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அம்பாறை – கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் இன்று (13) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.கல்முனை மாநகர முதல்வரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்முனை பிரதேச செயலகத்தில் இருந்து ஊர்வலமாக கல்முனை பொலிஸ் நிலையம் வரை சென்றனர். அங்கு கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்திக்க முற்பட்ட உத்தியோகத்தர்களை அணுகிய பொறுப்பதிகாரி எச்சரிக்கை விடுத்து போராட்டக்காரர்களை திருப்பியனுப்பினார்.

கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பிரதேச செயலகம் ஆகியவை ஒரே வளாகத்தில் காணப்படுவதுடன் ஒரே நுழைவாயிலை உத்தியோகத்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன், கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம்.றகீப் மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் செயற்பட்டு வருகின்றனர் என்பதுடன், இவ்வளாகத்தில் இருந்த பாரிய மரம் ஒன்றினை வெட்டியமைக்காக பிரதேச செயலக உத்தியோகத்தர்களை அநாகரீக வார்த்தைகளால் திட்டியதாக மாநகர சபை முதல்வர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்