உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


எஸ்.ஜெய்சங்கர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், சுபிக்‌ஷா நடிப்பில் தாய் மூவீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டை நாய்’. ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்‌ஷா நடித்துள்ளார். மேலும் ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி, ரமா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

“படத்தின் நாயகன் முரடன் என்கிற அளவுக்குக் கடினமான மூர்க்கனாக இருப்பவன். ஆனால் அடிப்படையில் நல்லவன். இவ்வளவு நல்லவனா என்று அவனுக்குத் தெரியாது.

அப்படிப்பட்டவனை உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண் அவனை யார்? என்று உணர வைக்கிறாள். இப்படிப்பட்ட இரு துருவ குணச்சித்திரங்களும் எப்படி இணைய முடியும்.? அவர்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள் என்பதே கதை,இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்