உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மலேசியாவை சேர்ந்த விமானிகளும், விமான பணியாளர்களும், அவுஸ்ரேலியாவுக்கு போதைப் பொருள் கடத்தியமை அம்பலமாகியுள்ளது.‘பிரிஸ்பேன் டைம்ஸ்’ என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த கடத்தலுக்காக கணிசமான தொகையை அவர்கள் சன்மானம் ஆக பெற்றதாகவும், மலேசியன் எயார்லைன்ஸ் மற்றும் மலிண்டோ எயார் விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமான பணியாளர்களை 49 வயதான மிஷெல் என்காக் டிரான் என்ற பெண் இயக்கி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் நகரில் இருந்தபடி கடத்தல் வலைப்பின்னல் அமைத்துச் செயற்பட்ட மிஷெல் என்காக் டிரான், விமானிகளும் விமானப் பணியாளர்களும் கடத்தி வரும் ஒவ்வொரு கிலோ ஹெராயினுக்கு 1.55 லட்சம் அவுஸ்ரேலிய டாலர்களை விலையாகக் கொடுத்துள்ளார்.

மறுபக்கம் அதே ஹெராயினுக்குக் கூடுதலாக 40 ஆயிரம் அவுஸ்ரேலிய டொரலர்களைக் கட்டணமாக வைத்து உள்ளூர் சந்தையில் விற்றுள்ளார். இடைத்தரகர்கள் மற்றும் கூரியர் செலவுகளுக்கு இந்த லாபத்திலிருந்து பணம் கொடுத்துள்ளார்.

கடந்த 2018 ஒக்டோபரில் தொடங்கி ஜனவரி 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 8 கிலோ எடையுள்ள போதைப்பொருளை அவர் அவுஸ்ரேலியாவுக்குள் கடத்தி வரச் செய்தார் என்றும் உள்ளூர் நீதிமன்றத்தில் அவுஸ்ரேலிய அரசு தரப்பு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரிஸ்பேன் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்