உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


குவைத்தில் இலங்கை பணிப்பெண்ணொருவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டில் செயற்படும் ‘கல்ப் நியூஸ்’ தெரிவித்துள்ளது.

‘கல்ப் நியூஸ்’ இந்த சம்பவம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, எரிகாயங்கள் உட்பட பல காயங்களுடன் அமரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இலங்கை பணிப்பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த பணிப்பெண்ணிற்கு தொழில்வாய்ப்பை வழங்கியவர்களே அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனவே அவர்களையும் விசாரணை செய்துவருகின்றோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட இலங்கை பணிப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முழுமையான அறிக்கையை பெறுவதற்காகவும் என்ன நடந்தது என்பதை உறுதி செய்வதற்காகவும் உயிரிழந்த பணிப்பெண்ணின் உடலை தடயவியல் பிரிவிற்கு அனுப்பியுள்ளோம் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில், பணிப்பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் குவைத்தை சேர்ந்த தம்பதியினரை பொலிஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்” என கல்ப் நியூஸ்’  தெரிவித்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்