உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் நகர் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,முல்லைத்தீவிலிருந்து மாங்குளம் வீதியால் மாங்குளம் நோக்கி பயணித்த பிக்கப் ரக வாகனம் ஒன்று வீதியை கவனிக்காது திடீரென மீண்டும் முல்லைத்தீவு பக்கமாக திரும்ப முற்பட்ட வேளை மாங்குளம் நோக்கி வருகை தந்த ஹயஸ் வாகனத்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது ஹயஸ் வாகனத்தில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டி ஊடாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்